சிறுதானியங்கள் விழிப்புணர்வு கண்காட்சி

சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் காரைக்குடியில் சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-09-22 18:45 GMT

காரைக்குடி

சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் காரைக்குடியில் சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.

சிறுதானிய கண்காட்சி

சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சரியான உணவுகள் உண்ணுதல் என்ற திட்டத்தின் கீழ் சிறுதானிய உணவு வகைகளின் பயன்கள் குறித்து சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நிகழ்ச்சி காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமை தாங்கினார். அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி முன்னிலை வகித்தார்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசச்சிரன் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, காரைக்குடி தாசில்தார் தங்கமணி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயசந்திரன், அழகப்பா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், பொருளியல் துறை தலைவர் செல்வராஜ், கல்லூரி நுகர்வோர் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் லதா, பேராசிரியர்கள் வேலாயுதராஜா, சரவணன், லட்சுமணக்குமார், சுந்தரி, தெய்வமணி, சித்ரா, சர்மிளா, செல்வமீனா, மார்ட்டின் ஜெயபிரகாஷ் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

பல்வேறு போட்டிகள்

சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரியில் நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில் கடந்த 2022-23-ம் ஆண்டு சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்தது என்றும், இதை வெளிக்கொண்டு வரும் வகையில் கல்லூரியில் பாரம்பரிய சிறுதானிய உணவு குறித்த போட்டிகள், கோலப்போட்டி, கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தியாகராஜன் (சாக்கோட்டை), வேல்முருகன் (காரைக்குடி), சரவணக்குமார் (சிவகங்கை), ராஜேஷ்குமார் (காளையார்கோவில்) உதவியாளர் கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்