அரசு பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி
அரசு பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது.;
தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகளில் சமைத்த உணவுகளை காட்சிப்படுத்தி இருந்தனர். இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கண்காட்சியை தரகம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் வேதவள்ளி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
கடவூர் ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, கண்காட்சியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.