பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சிவகாசி
சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் விருதுநகர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கல்வி சுற்றுலா நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ஜமுனாராணி வரவேற்று பேசினார். திறன் மேம்பாட்டு பயிற்சி பெற 100 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்களுக்கு அரசன் கல்வியியல் கல்லூரியில் 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவும், தங்கும் இடமும் அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் தீபிகாஸ்ரீ, மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி, பள்ளி துணை ஆய்வாளர் வெங்கட்ராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.