திறன் மேம்பாட்டு பயிற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சியை மகரிஷி பள்ளி குழுமங்களின் தாளாளர் குருவலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.இந்த மேம்பாட்டு பயிற்சி முகாமில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு விளையாட்டு முறையில் கல்வி கற்பது, செய்முறை தேர்வுகள், ஆசிரியர்களுக்கு பாடங்களை நடத்துவது குறித்தும், இலக்கணங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் முதல்வர் கமலா, துணை முதல்வர் சித்ரா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.