சிவன்மலை முருகன் கோவிலில் நடை அடைப்பு

Update: 2022-10-25 15:48 GMT


சூரிய கிரகணத்தை முன்னிட்டு காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோவிலில் நேற்று மதியம் 2 மணி முதல் நடை அடைக்கப்பட்டது.

சூரிய கிரகண நிகழ்ச்சி நேற்று ஏற்பட்டதையடுத்து சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மதியம் 2 மணிக்கு நடை சாத்தப்படும் என இக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து கோவில் வளாகத்தில் அறிவிப்பு சுவரொட்டியும் ஒட்டி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று மதியம் 2 அளவில் நடை சாத்தப்பட்டது. (புதன்கிழமை) இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல கோவில் திறக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெறும் என கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்