சிவகங்கை: போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் பத்திரப்பதிவு - 2 சார்பதிவளார்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த கருப்பன் என்பவருக்கு திருவேலங்குடி கடம்பவனத்தில் ஐந்தரை ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இந்நிலையில் கருப்பன் கடந்த 2020-ம் ஆண்டு குடும்பத்தோடு மலேசியா சென்றுவிட்டு, 2022-ல் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது அவருக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை போலியான ஆதார் அட்டை தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளார். இது குறித்து காவல்துறையில் கருப்பன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், குறிப்பிட்ட காலகட்டத்தில் சார்பதிவாளர்களாக இருந்த சரவணன் மற்றும் சங்கரமூர்த்தி உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.