அரூர் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய சித்த மருத்துவ தினம் கடைபிடிப்பு

Update: 2023-01-12 18:45 GMT

அரூர்:

அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை, சித்தேரி, சின்னாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய சித்த மருத்துவ தினம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் அகத்தியமாமுனிவர் பிறந்த நாள் விழா நடந்தது. சித்த மருத்துவர் ராதாலட்சுமி தலைமை தாங்கினார். அரூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் (பொறுப்பு) வில்லியம் லாரன்ஸ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் டாக்டர்கள் சத்யா, சித்திரை செல்வி, தீபிகா, வித்யா, அஸ்வினி மற்றும் ஆஸ்பத்திரி மருந்தாளுனர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்