சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
புகழூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலையின் வளாகத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதேகோரிக்கையை வலியுறுத்தி மாலையில் ஆலை வளாகத்திற்கு வெளியே சி.ஐ.டி.யூ. கட்சியினர் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.