கொண்டலாம்பட்டி:-
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 54), வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று உடல் உபாதை ஏற்பட்டதால் வலி தாங்க முடியாத ஏழுமலை மனம் உடைந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மொட்டை மாடிக்கு சென்றார். அங்குள்ள கொக்கியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.