வரதராஜபெருமாளுக்கு வெள்ளி கிரீடம்
மணப்பள்ளி வரதராஜபெருமாளுக்கு வெள்ளி கிரீடம் அலங்காரம் செய்யப்பட்டது.
மோகனூர்
மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளியில் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சாமிகளுக்கு பாலப்பட்டியை சேர்ந்த பக்தர் ஒருவர் வெள்ளி கல் பதித்த கிரீடம் கண்காணிக்கையாக வழங்கினார். அதைத்தொடர்ந்து சாமிக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாளுக்கு வெள்ளி கிரீடம், துளசி மற்றும் வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.