அகழாய்வில் சில்லுவட்டு, சங்கு வளையல்கள் கண்டெடுப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சில்லுவட்டு, சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.;

Update:2023-09-26 02:42 IST

தாயில்பட்டி

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சில்லுவட்டு, சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சங்கு வளையல்கள்

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் சிறுவர்கள் பாண்டி விளையாட பயன்படுத்திய சில்லு வட்டுகள், சங்கு வளையல்கள், இரும்புக்கருவி, மண்பாண்ட பொருட்கள் கிடைத்துள்ளது.

இதுவரை ஏராளமான மண்பாண்ட பொருட்கள், தங்கத்தாலி, முத்திரை கருவி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணம், பச்சை குத்தும் கருவி திரவம் வடிந்த பாத்திரம், பாசிமணிகள், தீப விளக்குகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட செங்கல், கருங்கல் செங்கற்களால் செய்யப்பட்ட சுவர் பகுதி உள்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

கண்காட்சி

முதலாம் கட்ட அகழாய்வை விட 2-ம் கட்ட அகழாய்வில் கூடுதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. 2-ம் கட்ட அகழாய்வு பணி இந்த வாரத்துடன் நிறைவு பெற இருப்பதால் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி, தோண்டப்பட்ட குழிகளின் வரைபடம் மற்றும் நிழற்படம், வரைதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிவப்பு, கருப்பு நிறத்திலான பானை ஓடுகள் தரம் பிரிக்கும் பணியின் மூலம் பானை ஓடுகள் எந்த ஆண்டை சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். 2-ம் கட்ட அகழாய்வு குறித்து அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. முதலாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு உள்ளனர். அகழாய்வு மற்றும் கண்காட்சி நடைபெறும் இடம் வரை தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இன்னும் ஏராளமானோர் பார்வையிட வருவார்கள் என அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்