தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 4 ஆயிரத்து 250 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.771-க்கும், குறைந்தபட்சமாக ரூ.573-க்கும், சராசரியாக ரூ.695.26-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.29 லட்சத்து 55 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் வர்த்தகம் நடந்தது.