வாயில் கருப்பு துணி கட்டி அறவழி மவுன போராட்டம்

ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி அறவழி மவுன போராட்டம் நடத்தினர்.

Update: 2022-09-24 18:21 GMT

குடியாத்தம்

இந்து மதத்தை அவதூறாக பேசியதாக கூறப்படும் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து குடியாத்தத்தில் புதிய பஸ் நிலையம் அருகே இந்து உணர்வாளர்கள் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி அறவழி மவுன போராட்டம் நடைபெற்றது.

நகர பா.ஜ.க. தலைவர் என்.ராஜாசெல்வேந்திரன், நகர பொதுச்செயலாளர் ஆர்.ரங்கநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் வாழைப்பிரகாசம், எம்.ஆர்.மகாபலீஸ்வரப்பா, எம்.சுசில்குமார், ஆர்.சிவன், வி.கிரி, ஜி.பார்த்தசாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கருப்பு பேட்ஜ் அணிந்தும், வாயில் கருப்பு துணி கட்டியும் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்