தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்

சிவகாசி பகுதியில் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் சென்றனர்.

Update: 2023-08-07 22:17 GMT

சிவகாசி,

சிவகாசி பகுதியில் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் சென்றனர்.

நினைவு தினம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் நேற்று தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி வனராஜா தலைமை தாங்கினார்.

சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திலிபன்மஞ்சுநாத் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் டேலண்ட் அன்பரசு, கலைமணி, கவிதாபிரவீன், ஒன்றிய நிர்வாகிகள் உசிலை தங்கராம், அக்னிவீர், பஞ்சாயத்து தலைவர்கள் எஸ்.என்.புரம் கருப்பசாமி, லீலா வதி சுப்புராஜ், கவிதா பாண்டியராஜ், அந்தோணி, ஆலாவூரணி வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகாசி மாநகரம்

சிவகாசி மாநகர தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு வந்து சிவன் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில் தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் அதிவீரன்பட்டி செல்வம், பகுதி செயலாளர்கள் சபையர் ஞானசேகரன், காளிராஜன், மாரீஸ்வரன், துணை செயலாளர்கள் சாந்தகுமார், பாக்கியலட்சுமி, மண்டல தலைவர் சேவுகன், கவுன்சிலர் சேதுராமன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் இன்பம், திருத்தங்கல் ராஜேஷ், மைக்கேல், படக்கடை கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் 500 பேருக்கு மாநகர செயலாளர் உதயசூரியன் அன்னதானம் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்