சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

Update: 2023-09-04 18:45 GMT

வேதாரண்யம் வடக்கு வீதி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சித்தி விநாயகா் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி கடந்த 1-ந்தேதி விக்னேஸ்வர பூஜை தொடங்கியது. நேற்று காப்பு கட்டுதலும், முதல் மற்றும் 2-ம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தது. பின்னா் புனித நீா் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்