சித்த மருத்துவ பிரிவு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ பிரிவு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், அரசின் வருடாந்திர செயல் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சித்த மருத்துவ பிரிவு கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சித்த மருத்துவப் பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி, உதவி சித்த மருத்துவ அலுவலர் லதா, உதவி ஹோமியோபதி மருத்துவ அலுவலர் லெட்சுமிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.