சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது
திருப்பத்தூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் சிறுமி தாயுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தாய் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் துரை நகரில் உள்ள சித்தப்பா உறவு முறையான 32 வயது கூலித்தொழிலாளி வீட்டில் விட்டுவிட்டு தினமும் வேலைக்கு செல்வாராம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சிறுமியை திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு, அ்வரது தாய் அழைத்துச் சென்று பரிசோதித்ததில், சிறுமி இரண்டு மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில், சித்தப்பா பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் டவுன் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சித்தப்பாவை கைது செய்தனர்.