பட்டுக்கோட்டை பகுதியில் 6-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
பட்டுக்கோட்டை பகுதியில் 6-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பட்டுக்கோட்டை புறநகர் உதவி செயற்பொறியாளர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் பருவ கால பராமரிப்பு பணிகள் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழப்பாளையம், எம்.என்.தோட்டம், மேலத்தெரு, லெட்சத்தோப்பு, நியூ ஹவுசிங் யூனிட், அதம்பை, குடிநீர், ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், வீரக்குறிச்சி, குறிச்சி மற்றும் பாளமுத்தி மின் பாதைகளுக்கு மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.