இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

Update: 2022-11-27 18:45 GMT

எலச்சிபாளையம்:

நாமக்கல் மின்பகிர்மான வட்டம் திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட உஞ்சனை துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடைய கவுண்டம்பாளையம், ஆலங்காட்டுப்புதூர், சத்தியநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், 85 கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி, போக்கம்பாளையம், சமுத்திரம் பாளையம், மோளிப்பள்ளி, மாச்சம்பாளையம் கோலாரம், கரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்