திருச்செங்கோடு துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்செங்கோடு நகராட்சி பகுதி முழுவதும், கருவேப்பம்பட்டி, ஆத்தூராம்பாளையம், நாராயணம் பாளையம், அம்மாபாளையம், சீனிவாசம்பாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, அணிமூர், ஆண்டிபாளையம், தோக்கவாடி, வரகூராம்பட்டி, செங்கோடம்பாளையம் முதல் சிந்தம்பாளையம் வரை, கைலாசம்பாளையம் முதல் திருமங்கலம் வரை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை செயற்பொறியாளர்கள் வரதராஜன், முருகன் ஆகிேயார் தெரிவித்துள்ளனர்.