காட்சிப்பொருளான குடிநீா் தொட்டி
மையனூரில் காட்சிப்பொருளான குடிநீா் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என்று கிராம மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.
ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மையனூர் ஊராட்சி குளக்கரை அருகில் மினி குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக மினி தொட்டியின் மூலம் குடிநீா் வினியோகம் செய்யப்படாததால் அது காட்சிப் பொருளாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர். காலிக்குடங்களை தூக்கிக்கொண்டு வெகுதூரம் நடந்து சென்று விவசாய கிணறு, பம்பு செட், குழாய் ஆகியவற்றில் தண்ணீரை பிடித்து வர வேண்டிய நிலைஉள்ளதால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து காட்சிப்பொருளாக இருக்கும் குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.