"மன்னிப்பு கேட்க வேண்டும்": பாஜக தலைவரை சுற்றி வளைத்த விசிக கட்சியினர் - அரியலூரில் பரபரப்பு
பாஜக பட்டியலின தலைவர் காரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வழிமறித்தனர்.
அரியலூர்,
அரியலூரில், பாஜக பட்டியலின தலைவர் தடா பெரியசாமியின் காரை வழிமறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரியலூரில் பாஜக நிர்வாகியின் இல்லத்தில், பிறந்த நாள் விழாவிற்காக தடா பெரியசாமி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை வழிமறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், விசிக தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசிக கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தடா பெரியசாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பாஜக தலைவர் காரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.