சுருக்குமடி வலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்

சுருக்குமடி வலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என தரங்கம்பாடி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Update: 2023-01-03 18:45 GMT

மயிலாடுதுறையில் கலெக்டர் லலிதாவிடம் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக்கூட்டம் நாகை அக்கரைப்பேட்டையில் நடந்தது. இதில் மீனவ சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி தொழில்செய்ய ஒரு சில கிராமங்கள் முயற்சித்து வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக அரசு ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குடி வலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று 4 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதனை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் வழங்கி வருகிறோம். இதேபோல் அக்கரைப்பேட்டை தலைமை மீனவ கிராமத்தின் சார்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை நிரந்தரமாக தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு்ள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்