கூடலூரில் அரிசி இருப்பு குறைவு:ரேஷன் கடை பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

கூடலூரில் ஆய்வின்போது அரிசி இருப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய ரேஷன் கடை பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-07-04 14:14 GMT

கூடலூர்

கூடலூரில் ஆய்வின்போது அரிசி இருப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய ரேஷன் கடை பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதிகாரிகள் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தின் கீழ் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள், கூட்டுறவு துறை சார்பில் 335 கடைகள் என மொத்தம் 404 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 148 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு நடத்தும் படி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூட்டுறவு துறை அதிகாரிகள் மற்றும் வட்ட வழங்கல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பல இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதேபோல் கடந்த 29-ம் தேதி கூடலூர் 2-ம் மைல் கூட்டுறவு ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

கூடலூரில் ஆய்வின்போது அரிசி இருப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய ரேஷன் கடை பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கண்காணிப்பாளர் ஆறுமுக செல்வம், கூடலூர் வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் ரேஷன் கடையில் பொருட்களின் இருப்பு விவரங்களை சரிபார்த்தனர். அப்போது சுமார் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருப்பு குறைவாக இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால் உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடையின் பெண் ஊழியர் கோகிலத்துக்கு (வயது 50) ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில் கூட்டுறவு துணைப் பதிவாளர் முத்து சிதம்பரம் ரேஷன் கடை பெண் ஊழியர் கோகிலத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்