நாகர்கோவிலில் அதிகாரிகள் சோதனை:பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த கடைக்கு 'சீல்'

நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2022-12-02 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

அதிகாரிகள் சோதனை

தமிழகம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் பல இடங்களில் திருட்டுத்தனமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு இருந்து வருகிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் ஆணையர் ஆனந்த் மோகன், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் நேற்று காலை அலெக்சாண்டிரா பிரஸ் ரோட்டில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 910 கிலோ இருந் தன. அதை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

கடைக்கு 'சீல்'

அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து 'சீல்' வைத்தனர்.

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், "அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும் சில கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்