திட்டச்சேரியில் கடைகள் அடைப்பு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டச்சேரியில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

Update: 2022-09-25 18:36 GMT

திட்டச்சேரி:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டச்சேரியில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

கடைகள் அடைப்பு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ.) சோதனை நடத்தினர். இதுதொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டம் திட்டச்சேரி, கட்டுமாவடி, புறாக்கிராமம், ப.கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று முழு கடைஅடைப்பு போராட்டம் நடந்தது.வர்த்தக சங்கத்தினர் ஒத்துழைப்புடன் அமைதியான முறையில் இந்த கடைஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

இதேபோல, திட்டச்சேரியில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.கடை அடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தையொட்டி திட்டச்சேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்