நெல்லையில் கடைகள் அடைப்பு

வணிகர் தினத்தையொட்டி நெல்லையில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Update: 2023-05-05 19:00 GMT

வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் வணிகர்கள் உரிமை முழக்க மாநாடு நேற்று நடந்தது. இதனால் நெல்லையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பாளையங்கோட்டை மார்க்கெட், டவுன் ரதவீதிகளில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு மாநாட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்