ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் நகை கடை நடத்தி வருபவர் சுகுமார். இவர் தனது கடையில் வேலை பார்க்கும் ஊழியரிடம் 3 பவுன் நகையும், ரூ. 1 லட்சமும் பையில் வைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்த போது பணம் மற்றும் நகையை காணவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.