வருகிற 16, 26-ந் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

Update: 2023-01-11 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினமான வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) மற்றும் குடியரசு தினமான 26-ந் தேதி ஆகிய நாட்களில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் அவற்றுடன் இணைந்த மது கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுகூடங்கள், முன்னாள் படை வீரர் மது விற்பனை கூடம் ஆகியவை அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. இதை மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்