சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-11-07 18:45 GMT

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்னாபிஷேக விழா

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னாபிஷேகம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னத்தால் அலங்கார சேவை நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

மகாலிங்கேஸ்வரர் கோவில்

தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் 30 கிலோ அரிசியை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை கொண்டு சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. பின்னர் சாமிக்கு அன்னத்தால் அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

நஞ்சுண்டேஸ்வரர் கோவில்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாம சுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி ஆத்துமேடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னம் மற்றும் பல்வேறு வகையான பலகாரங்களை கொண்டு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி

இதேபோல் தர்மபுரி அடுத்த சவுளுப்பட்டியில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள அமிர்தேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அமிர்தேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மலையை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாப்பாரப்பட்டி

பாப்பாரப்பட்டி சிவன் கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சிவகாமசுந்தரி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று மாலை சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

இதேபோல் காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்