சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு

திருவாரூர் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-18 18:45 GMT

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சனிபிரதோஷ வழிபாடு

நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதனை முன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர், பிரதோஷ நாயகருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.

ஆலங்குடி

ஆலங்குடி குருபரிகார கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதனை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூவனூர் கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக நந்திக்கும், சிவனுக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், ருத்ரகோடீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், வில்வபொடி, மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்