சக்தி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா
சேர்வைகாரன்மடம் சக்தி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம் சக்தி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விநாயகருக்கு விசேஷ பூஜையும், 108 திருவிளக்கு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.