செய்துங்கநல்லூர் பகுதியில்வழிப்பறி திருடர்கள் 2பேர் கைது
செய்துங்கநல்லூர் பகுதியில் வழிப்பறி திருடர்கள் 2பேர் கைது
ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜான் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செய்துங்கநல்லூரிலுள்ள ஒரு கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற மேலதூதுகுழி கிருஷ்ணன் மகன் மாடசாமியை (34) பிடித்து விசாரித்தனர். அவர் அப்பகுதியில் வந்த ஒரு தொழிலாளியை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டுதகராறு செய்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து கருங்குளம் ஜங்ஷன் பகுதியில் நின்று கொண்டிருந்த கருங்குளம் மாதாங்கோவில் தெரு சுப்பையா மகன் மூக்காண்டியும்(39), தொழிலாளி ஒருவரிடம் கத்தியை காட்டிமிரட்டி பணம் கேட்டு தகராறு ெசய்தது தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைதுசெய்தனர். இந்த 2 பேர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.