பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் அதிரடி கைது

கயத்தாறு அருகே தனியார் தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-16 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே தனியார் தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஒரு அரசு உதவிபெறும் தனியார் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் அல்பர்ட் கென்னடி (வயது 57).

நெல்லை பாளையங்கோட்ைட தேவகிருபை தெருவை சேர்ந்த இவர் அந்த பள்ளியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைபார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று அந்த பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவியை அல்பர்ட் கென்னடி தனது அறைக்கு அழைத்துள்ளார். அங்கு அந்த மாணவி சென்றதும் அல்பர்ட் கென்னடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

போக்சோ சட்டத்தில் கைது

பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் அந்த மாணவி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள். இதைத் தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதுெதாடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் விசாரணை நடத்தினார். இதையடுத்து நேற்று போக்சோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் அல்பர்ட் கென்னடியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்