சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் லாரி கிளீனர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி கிளீனர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி காஜாமலை கோகுலம் காலனியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மகன் கர்ணன் (வயது 20), லாரி கிளீனர். இவர் திருச்சியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 26-ந்தேதி கர்ணன் அந்த சிறுமியை மதுரைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருச்சி அனைத்து மகளிர் போலீசார் கர்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.