2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

நெல்லை அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-25 19:47 GMT

நெல்லை அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கூலி தொழிலாளி

நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தை சேர்ந்தவர் ராசையா (வயது 60). கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் ஒரு கோவில் அருகே 10 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

போக்சோவில் கைது

இதுகுறித்து அந்த சிறுமிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து ராசையாவை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்