பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-14 18:45 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே உள்ள நெடுமதுரையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 24). தொழிலாளி. இவருக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த 23 வயது பெண்ணுக்கு ஆறுமுகம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையடுத்து ஆறுமுகம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்