கடலூர் முதுநகரில் நள்ளிரவில் குளியலறைக்குள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கடலூர் முதுநகரில் நள்ளிரவில் குளியலறைக்குள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-09-15 18:45 GMT


கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் ஏணிக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 25), எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணி அளவில், அந்த மாணவி தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற போது, அங்கு வந்த ஆகாஷ், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை பாா்த்த மாணவியின் தாய் கூச்சலிட்டுள்ளாா். உடனே ஆகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தொிகிறது. இதுகுறித்து மாணவியின் தாய், கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்