பாதாள சாக்கடையில் அடைப்பு நீக்கும் பணி
பாதாள சாக்கடையில் அடைப்பு நீக்கும் பணியை நகரமன்ற தலைவர் ஆய்வுசெய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 2-ல் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி கிடந்தது. இந்த அடைப்பு நீக்கும் வேலையை செய்ய வேலூர் மாநகராட்சியில் பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அடைப்பு நீக்கும் வாகனத்தை அனுப்பி வைத்தனர். அந்த வாகனம் போதுமானதாக இல்லை. மேலும் ஆற்காடு அருகே உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் கேட்டு பெறப்பட்டு 2 வாகனங்களைக் கொண்டு அடைப்பை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகரமன்ற தலைவர் எஸ்.ஆர்.பி.தேவி பென்ஸ் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கும்படி பணியாளர்களை கேட்டுக் கொண்டார்.