ஜமாபந்தியில் 747 மனுக்களுக்கு தீர்வு

ஜமாபந்தியில் 747 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-06-20 21:59 GMT

தாமரைக்குளம்:

அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 13-ந் தேதி முதல் நேற்று வரை ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல் தொடர்பாக 549 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 300 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 99 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 150 மனுக்கள் நிலுவையில் உள்ளன. வீட்டுமனை பட்டா கேட்டு 95 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 48 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 33 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதேபோல் உதவித்தொகை, சிட்டா, குடும்ப அட்டை சான்றுகள், பரப்பு திருத்துதல், வகைப்பாடு மாற்றம், உட்பிரிவு, அளந்து அத்துக்காட்டல் உள்ளிட்டவை தொடர்பாக மொத்தம் 1082 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 399 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. 131 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 562 மனுக்களுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன் ஆகியோர் பயனாளிகளுக்கு நிலப்பட்டா, உதவித்தொகை உள்ளிட்டகளை வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்