மக்கள் நீதிமன்றம் மூலம் 681 வழக்குகளுக்கு தீர்வு

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 681 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2022-06-27 14:30 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஊட்டி நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார். சார்பு நீதிபதி ஸ்ரீதர், உரிமையியல் நீதிபதி மோகனகிருஷ்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் தமிழ் இனியன் ஆகியோர் நிலுவையில் இருந்த வழக்குகளை எடுத்து சமரச தீர்வு கண்டனர். இதேபோல் குன்னூர், கோத்தகிரி, பந்தலூர், கூடலூர் தாலுகா நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 1,137 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 652 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ரூ.2 கோடியே 66 லட்சம் ஆகும். வங்கிகளில் வாராக்கடன் சம்பந்தமாக சுமார் 300 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 29 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ரூ.84 லட்சம் ஆகும். மொத்தம் 681 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3½ கோடி ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்