மக்கள் நீதிமன்றத்தில் 4,684 வழக்குகளுக்கு தீர்வு
கோவையில் மக்கள் நீதிமன்றத்தில் 4,684 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு சட்ட பணிகள் ஆணை குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் (பொறுப்பு) மற்றும் முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி நம்பிராஜன் முன்னிலை வகித்தார்.
இதில், 23 சிறப்பு அமர்வுகள் மூலம் போக்குவரத்து, சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து, நில ஆர்ஜித வழக்குகள் என வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. இதில் 4,684 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.14 கோடியே 78 லட்சத்து 17 ஆயிரத்து 457 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.