ஏரி விழலுக்கு தீ வைப்பு

ஏரி விழலுக்கு தீ வைக்கப்பட்டது.

Update: 2023-04-25 18:45 GMT


விழுப்புரம் ஜானகிபுரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள விழல்களுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்தனர். அப்போது காற்று வேகமாக வீசவே தீ, மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதனால் அந்த ஏரி முழுவதும் பெரும் புகைமூட்டமாக காட்சியளித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்