கூரை வீட்டுக்கு தீ வைப்பு

கூரை வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

Update: 2023-09-03 19:07 GMT

காரைக்குடி

காரைக்குடி தெற்கு போலீஸ் சரகம் செஞ்சை பகுதியை சேர்ந்தவர் பிரியா (வயது 32). இவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் ரேவதி. இவர் பிரியாவின் வீட்டை தனக்கு சொந்தமானது என்று கூறி பல நாட்களாக பிரச்சினை செய்து வந்ததோடு அதனை காலி செய்யுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரியா வீட்டினுள் சமையல் செய்து கொண்டிருக்கும் போது ரேவதி வீட்டிற்கு வெளியே கூரையில் தீ வைத்து விட்டாராம். இதனால் வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இதனால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததுள்ளது. இது குறித்து பிரியா கொடுத்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் ரேவதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்