குவாரியில் 2 பொக்லைனுக்கு தீ வைப்பு

காரியாபட்டி அருகே கிராவல் குவாரியில் 2 பொக்லைனுக்கு தீ வைத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-20 19:44 GMT

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே கிராவல் குவாரியில் 2 பொக்லைனுக்கு தீ வைத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணம் கேட்டு மிரட்டல்

காரியாபட்டி தாலுகா மேலக்கள்ளங்குளம் பகுதியில் மதுரையை சேர்ந்த பிரதீப் ராம்குமார் என்பவர் அனுமதி பெற்று கிராவல் குவாரி நடத்தி வருகிறார். மேலக்கள்ளங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்கள் அவரிடம் சென்று பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் தரவில்லை என்றால் பெட்ரோல் குண்டு வீசி விடுவதாகவும் எச்சரித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மறுநாள் கிராவல் குவாரிக்கு மீனாட்சிசுந்தரம், கடம்பவனம், அய்யனார் என்ற கோசி மணி ஆகியோர் சென்றனர்.

பொக்லைனுக்கு தீ வைப்பு

அப்போது அவர்கள் அங்குள்ள பொக்லைன் சாவியை பிடுங்கியும், குவாரியில் இருந்த ரூ.22 ஆயிரத்தை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்த 2 பொக்லைன் எந்திரங்களின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சக்குடியைச் சேர்ந்த ஆனந்த முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் மேற்படி 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்