கணபதி
கணபதியில் வீடு புகுந்து 11½ பவுன் நகை திருடிய வேலைக்கார ெபண்ணின் மகனை போலீசார் கைது செய்தனர்.
வீட்டு வேலை
கோவை கணபதி எப்.சி.ஐ ரோடு பாலு கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் சிங். இவரது மகன் பீயோ ராபர்ட் (வயது 31). இவர் தனது வீட்டின் மேல் மாடியில் தனது மனைவி,குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.வீட்டின் கீழ்தளத்தில் அவரது தாயார் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் தர்மபுரியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி கல்பனா என்பவர் கடந்த 8 வருடங்களாக வீட்டு வேலை செய்து வருகிறார்.
வேலை செய்து வரும் கல்பனா பீயோ ராபார்ட்ன் எதிர்வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் (28), என்ற மகன் உள்ளார். அவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவ்வப்போது கோவைக்கு வந்து தனது தாய் கல்பனாவை பார்த்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
கைது
சம்பவத்தன்று பீயோ ராபர்ட் தயார் வசித்து வரும் வீட்டின் கீழ் தளத்தில் அறைக்குள் பீரோவை திறந்து 9½ பவுன் தாலிக்கொடி, 1,½ பவுன் வளையல்கள், ½ பவுன் கம்மல் உள்பட சுமார் 11½ பவுன் நகைகளை மர்ம ஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் பீயோ ராபர்ட்டின் வீட்டில் வேலை செய்து வரும் கல்பனாவின் மகன் சுபாஷ் தனது தாயை பார்க்க வந்து சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுபாஷிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது நகைகளை திருடியதை சுபாஷ் ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். சுபாஷிடமிருந்து 1½ பவுன் வளையல்கள் மற்றும்½ பவுன் கம்மல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.