மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 கல்லூரி மாணவர்கள் படுகாயம்

Update: 2023-05-21 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஓந்தியாம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் நித்திஸ் (வயது 18). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பரான திருவண்ணாமலை மோத்திக்கல் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் கவியரசு (17) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் அருகே சென்றார். அப்போது சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் நித்திஸ் மற்றும் கவியரசு ஆகியோா் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்