யானை தாக்கி முதியவர் படுகாயம்

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-08-27 16:41 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகா சித்தலிங்கன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முத்தப்பா (வயது 85). இவர் கூச்சுவாடியில் இருந்து வெள்ளக்கல் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த யானை முதியவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த முத்தப்பாவை பொதுமக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்