விபத்தில் போலீஸ்காரர் படுகாயம்
தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பிரகாசம் (வயது 42). இவர் தனது மனைவியுடன் கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். நல்லாம்பட்டி பகுதியில் வந்த போது அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் போலீஸ்காரர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரகாசத்தை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது மனைவி லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.