விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்

ராஜபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-06-25 19:06 GMT

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் பருத்தி கலர் சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் நூல் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

கடந்த ஒரு வருடத்தில் நூல் விலை 230 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டி நூல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 5-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உற்பத்தி இழப்பு

இந்த போராட்டத்தால் உற்பத்தி இழப்பு ரூ.3.36 கோடியாகவும், அரசுக்கு ஏற்பட்டுள்ள வரி இழப்பு ரூ.16.80 லட்சமாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 21 நாட்களாக வேலையின்றி உள்ளதால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலை நிறுத்தப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிலாளர் நலத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவரம்பட்டியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்